அரசு பேருந்து பயணம் இனி இனிமையாகும்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்ட அதிரடி உத்தரவு
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: பொதுமக்கள் அளித்த புகாரின்படி செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் உள்ள நெடுஞ்சாலை உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
சென்னை முதல் திருச்சி வரை செல்லும் சாலையில் பயணவழி உணவகங்கள் அதிகமாக உள்ளன. ஆனால் அங்கு மக்களுக்கு பிடித்தமான உணவுகள் ஆரோக்கியமானதாக கிடைக்குமா என்பதே கேள்விக்குறி. மோட்டல்களில் பேருந்துகள் அரை மணிநேரம் நின்றாலும் சாப்பாட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவு. ஒரு டீயின் விலையை பார்த்தால் சாப்பிட்டே வந்துவிடலாம் என்றுதான் தோன்றும். பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியும் வந்துள்ளனர். தற்போது தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணவழி உணவங்களில் தரமற்ற உணவு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அதனடிப்படையில் பயணவழி உணவகம் மற்றும் கடைகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
என் வழி தனி வழி... என்னை சீண்டி பார்க்காதீங்க... .எதிர்க்கட்சிகளை விளாசிய இம்ரான்!
பின்னர், இதுதொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாமண்டூர் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் போக்குவரத்து கோட்ட மேலாளர் தலைமையில் நடந்த இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட உணவகம், பொதுமக்கள் சுட்டிக்காட்டிய குறைகள் எதையும் சரிசெய்யவில்லை என்பது கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் இன்று முதல் அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் மாமண்டூர் பயணவழி உணவகத்தில் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உணவகத்தின் ஒப்பந்ததாரான சேலத்தைச் சேர்ந்த ஸ்டார் அசோசியேட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் வாங்கி குடுக்கவா சம்பளம் தர்றாங்க.. ஆவேச இளைஞருக்கு போலீஸ் புகட்டிய பாடம்
மேலும், அரசு பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வுகள் நடத்தப்படும். தரம் குறைவாக உணவு மற்றும் கூடுதல் விலைக்கு வழங்கும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தரமான உணவு மற்றும் குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்