அரசுப்பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து..! சம்பவ இடத்திலே ஒருவர் பலியான பரிதாபம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.
ஓசூர் அருகே உள்ள சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சூளகிரி பேருந்து நிலையத்துக்கு செல்வதற்காக சர்வீஸ் ரோட்டில் சென்றுள்ளது. அப்போது அதே ரோட்டில் எதிர் திசையில் இருவர் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஐயப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு நபரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ACCIDENT, BUS, BIKE, HOSUR