'தப்பிக்கும்போது இப்படி ஆயிடுச்சு..'.. 'மகேஷ்க்கு ஸ்கெட்ச் போட்டதுக்கு 2 காரணம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள ஹொட்டல் வரை, மகேஷ் என்பவரை கும்பல் ஒன்று விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகியதை அடுத்து திருவள்ளூர் போலீஸார், மேலும் தனிப்படை அமைத்து, மகேஷைக் கொலை செய்த சிலரை பிடித்துள்ளனர்.

'தப்பிக்கும்போது இப்படி ஆயிடுச்சு..'.. 'மகேஷ்க்கு ஸ்கெட்ச் போட்டதுக்கு 2 காரணம்'!

அவர்களில் பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்(25), விமல்ராஜ் என்கிற ஜப்பான்(25), கோபிராஜ்(26), ராஜ்(25), அஜித்குமார்(25) உள்ளிட்டோர் கைதாகினர். இவர்களில் ஜப்பான் என்பவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

முன்னதாக ரூட்டு தல பிரச்சனை காரணமாக ஜப்பானின் தரப்பினரும், மகேஷின் தரப்பினரும் கல்லூரி காலம் தொட்டே மோதிக்கொண்டதாகவும், அதன் பிறகு வாலிபால் போட்டியிலும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து, மகேஷின்  நண்பர்கள் ஜப்பானை தீர்த்துகட்ட ஸ்கெட் போட்டுள்ளனர். ஆனால் அதற்குள் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களை போலீஸார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சென்றனர். அங்கு நண்பர்களைக் காணச் சென்றுள்ளார்.

ஆனால், திருவள்ளூர் நீதிபதி அன்றைய தினம் விடுப்பில் இருந்ததால், அனைவரும் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.  அப்போது நண்பர்களை பார்த்துவிட்டு வந்த மகேஷை ஹோட்டல் அருகே வைத்து ஜப்பான் தரப்பு இளைஞர்கள்  ஸ்கெட்ச் போட்டு கொன்றுள்ளனர். அவர்களை தேடிக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்தபோது தப்பிக்க முயன்று சுவர் ஏறி குதித்ததால் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக ஜப்பானின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

POLICE, VIOLENCE, YOUNGSTERS