கொரோனாவால் இறந்தவங்கள ‘அடக்கம்’ பண்ண எதிர்ப்பு தெரிவிச்சா.. இனி ‘அதிரடி’ ஆக்‌ஷன் தான்.. காவல்துறை கடும் எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவால் இறந்தவங்கள ‘அடக்கம்’ பண்ண எதிர்ப்பு தெரிவிச்சா.. இனி ‘அதிரடி’ ஆக்‌ஷன் தான்.. காவல்துறை கடும் எச்சரிக்கை..!

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய சுகாதார அதிகாரிகள் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். இதையறித்த அப்பகுதி மக்கள் மருத்துவரின் உடலை அங்கே அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சிலர் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது கற்களால் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் டிரைவர், சுகாதார ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவரின் உடலை எடுத்து சென்று போலீசாரின் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் மீது கற்களால் தாக்கியது தொடர்பாக 20 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தண்டையார்பேட்டையில் நடந்த சென்னை மாநகராட்சி ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தாலோ, அல்லது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.