'இந்தியாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்காக'... 'கூகுள் சுந்தர் பிச்சையின் மனம் நெகிழ வைக்கும் செயல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 கோடி அளித்துள்ளார்.

'இந்தியாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்காக'... 'கூகுள் சுந்தர் பிச்சையின் மனம் நெகிழ வைக்கும் செயல்'!

கொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் லாக் டெளன் அறிவித்துள்ளது. இதன்காரணமாக மக்கள் வேலையின்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். ஏழை மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை அரசாங்கம் வழங்கி வந்தாலும்,பொது நிவாரணம் வழங்குமாறு அனைவருக்கும் கோரிக்கை வைத்துள்ளன. இதையடுத்து தொழிலதிபர்கள், விளையாட்டுப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், GIVE INDIA என்கிற தன்னார்வ அமைப்பு நன்கொடையாளர்களுக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நிதி அளித்துள்ளார். தினசரி கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா லாக் டெளன் நேரத்தில் தேவையான பண உதவி வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என GIVE INDIA தெரிவித்துள்ளது. மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ட்வீட் செய்துள்ளது.

முன்னதாக, இந்திய மதிப்பில் 6107 கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளது. இதுமட்டுமன்றி கூகுள் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய ப்ளூடூத் உதவியுடன் இயங்கும் புதிய செயலி ஒன்றை வடிவமைத்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.