மாமல்லபுரத்தை குடும்பத்தினருடன் சுற்றிப்பார்த்த கூகுள் CEO சுந்தர் பிச்சை.. வைரல் போட்டோஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தை பார்வையிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மாமல்லபுரத்தை குடும்பத்தினருடன் சுற்றிப்பார்த்த கூகுள் CEO சுந்தர் பிச்சை.. வைரல் போட்டோஸ்..!

Also Read | "எந்த நேரமும் வெடிக்கலாம்.. அது மட்டும் நடந்தா".. எச்சரிக்கும் நிபுணர்கள்.. உச்சகட்ட பரபரப்பில் மக்கள்.. முழு விபரம்..!

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். அதன்பிறகு படிப்படியாக முன்னேறி கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்தார்.

கோரக்பூரில் உள்ள ஐஐடியில் மெட்டலர்ஜிகல் எஞ்சினியரிங்கில் பி.டெக்  முடித்த சுந்தர் பிச்சை அதன்பிறகு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயன்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள வார்ட்டன் ஸ்கூல் ஆஃப் யூனிவெர்சிட்டியில்  மேலாண்மை படிப்பை முடித்தார்.

Google CEO Sundar Pichai Visited Mamallapuram with his family

துவக்கத்தில், மெக்கின்சி & கம்பெனியில் மேலாண்மை ஆலோசனை பிரிவில் பணிபுரிந்துவந்த சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். ஆல்பபெட் குழுமத்தின் CEO-வாக கடந்த 2019 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டார். கூகுள் நிறுவனம் ஆல்பபெட் குழுமத்தின் கீழ் இயங்கிவரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Google CEO Sundar Pichai Visited Mamallapuram with his family

இந்நிலையில், கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்துடன் இந்திய அரசு இணைந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அதன்படி, நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுள் அப்ளிகேஷன்களை உருவாக்கி அதனை பயன்படுத்தி வந்தவர்களை கூகுள் நிறுவனம் பயிற்றுவிக்க முடிவு செய்தது. அதன்பிறகு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, இதுகுறித்த நிகழ்வுக்காக சுந்தர் பிச்சை சமீபத்தில் டெல்லி வந்திருந்தார்.

Google CEO Sundar Pichai Visited Mamallapuram with his family

இதனையடுத்து, நேற்று முன்தினம் தமிழகம் வந்த சுந்தர் பிச்சை மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். அங்குள்ள முக்கியமான இடங்கள் குறித்து சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அவருக்கு விளக்க, சுந்தர் பிச்சை ஆர்வத்துடன் அந்த இடங்களை கண்டு ரசித்திருக்கிறார். இந்நிலையில், மாமல்லபுரத்தை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சுற்றிப் பார்க்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Also Read | தல தோனியின் மகள் ஜிவாவுக்கு மெஸ்ஸி அனுப்பி வச்ச ஸ்பெஷல் Gift.. வைரலாகும் புகைப்படங்கள்..!

GOOGLE CEO, GOOGLE CEO SUNDAR PICHAI, MAMALLAPURAM, SUNDAR PICHAI VISITS MAMALLAPURAM, சுந்தர் பிச்சை

மற்ற செய்திகள்