'சுந்தர் பிச்சை' தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா?...வைரலாகும் புகைப்படம்...உண்மை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பொது மக்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களின் வாக்கினை செலுத்தி வருகிறார்கள்.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ தமிழத்தில் இன்று நடக்கும் மக்களவை தேர்தலில்,ஓட்டு போட்டதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்களித்ததாகவும்,வாக்களித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்ததாகவும் சிலர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.ஆனால் அதில் எந்தவித உண்மையும் இல்லை.தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சுந்தர் பிச்சை அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே அவருக்கு இந்தியாவில் ஓட்டே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் பரவி வரும் புகைப்படமானது,கடந்த 2017-ம் ஆண்டு தான் படித்த கரக்பூர் ஐஐடிக்கு வந்த போது அங்கு எடுக்கப்பட்டதாகும்.அதனை சில நெட்டிசன்கள் தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் அவர் ஓட்டு போட்ட பின்பு எடுத்த படம் என கிளப்பி விட அதுவும் தற்போது வைரலாகி வருகிறது.
Also got to visit my alma mater (and old dorm room!) for the first time in 23 years. Thanks to everyone @IITKgp for the warm welcome! pic.twitter.com/OUn7mlKGI7
— Sundar Pichai (@sundarpichai) January 7, 2017