நள்ளிரவு ‘முகமூடி’ அணிந்து வந்த மர்ம நபர்கள்.. சிசிடிவி-ல் பதிவான காட்சி.. அச்சத்தில் வியாபாரிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தங்கநகை பட்டறையில் முகமூடி கொள்ளையர்கள் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு ‘முகமூடி’ அணிந்து வந்த மர்ம நபர்கள்.. சிசிடிவி-ல் பதிவான காட்சி.. அச்சத்தில் வியாபாரிகள்..!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நிகில் படேல். இவர் சேலம் டவுனில் கடந்த 18 ஆண்டுகளாக தங்கத்தின் தரத்தை மதிப்பீடு செய்யும் பரிசோதனை பட்டறையை நடத்தி வருகிறார்.

Gold theft in Salem town police investigate

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்த பட்டறையின் பூட்டை உடைத்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் லாக்கரில் இருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு தங்க கட்டிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Gold theft in Salem town police investigate

இதுகுறித்து நிகில் படேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தடவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து வருகின்றனர். இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

Gold theft in Salem town police investigate

அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்தது பதிவாகியிருந்தது. தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட கடைக்கு அருகில் ஏராளமான நகை கடைகள் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்