RRR Others USA

நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை.. தடயத்தை அழிக்க கொள்ளையர்கள் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை.. தடயத்தை அழிக்க கொள்ளையர்கள் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்..!

திண்டுக்கல் திருநகரில் வசித்து வருபவர் தபால் நிலைய உதவி அதிகாரியான மணிமாறன். அதே பகுதியில் அவரது மகன் மனைவியுடன் வசித்து வருகிறார். அந்த வீட்டில் மணிமாறன் கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

Gold robbery at post office officer house in dindigul

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு மணிமாறனின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி உள்ளனர். இதன் பின்னர் போலீஸில் இருந்து தப்பிக்கும் நோக்கில் தடயங்களை அழிக்க, வீட்டுக்குள் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர்.

Gold robbery at post office officer house in dindigul

மணிமாறனின் வீட்டுக்குள் தீ எரிவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து போலீசார் தீயணைப்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையடித்துவிட்டு தடயங்களை அழிக்க வீட்டுக்குள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ROBBERY, DINDIGUL

மற்ற செய்திகள்