'இது தான் சரியான நேரம்'... 'ஆர்வம் காட்டும் மக்கள்'... ஒரே நாளில் மாறிய தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா காரணமாகப் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்த நிலையில், பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் தங்களின் பார்வையைத் திருப்பினார்கள். இதனால் கடந்த சில மாதங்களாகத் தங்க விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 464 விலை குறைந்துள்ளது.

'இது தான் சரியான நேரம்'... 'ஆர்வம் காட்டும் மக்கள்'... ஒரே நாளில் மாறிய தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?

நேற்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 4,524க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 464 குறைந்து ரூ. 4,466க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை  ரூ. 328 குறைந்து ரூ. 35,864-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை  மேலும், ரூ.136 குறைந்து  ரூ.35,728க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 73.50 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ.0.20 குறைந்து  ரூ. 73.30 விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 328 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு  மேலும் ரூ. 136 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை தற்போது 36,000 ரூபாய்க்குக் குறைவாக விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்