ET Others

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு.. முதல் குற்றவாளி யுவராஜ்க்கு என்ன தண்டனை..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு.. முதல் குற்றவாளி யுவராஜ்க்கு என்ன தண்டனை..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்தவர் கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். விசாரணையில் காதல் விவகாரத்தால் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஜோதிமணி இறந்துவிட்டார்.

இந்த வழக்கில், கோகுல்ராஜ் தரப்பில் வாதாட சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவரைத் தமிழக அரசு நியமித்திருந்தது. பல வருடங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்துள்ளது. இதனை அடுத்து, யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த நிலையில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு குற்றவாளிக்கான தண்டனை விவரங்களை நீதிபதி இன்று அறிவித்தார். அதில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு சாகும் வரை (3) ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம், அருண் (யுவராஜின் கார் ஓட்டுநர்) - சாகும்வரை (3) ஆயுள் தண்டனை, குமார் (எ) சிவக்குமாருக்கு 2 ஆயுள் தண்டனை, சதீஸ்குமாருக்கு 2 ஆயுள் தண்டனை, ரகு (எ) ஸ்ரீதருக்கு 2 ஆயுள் தண்டனை, ரஞ்சித்திக்கு 2 ஆயுள் தண்டனை, செல்வராஜுக்கு 2 ஆயுள் தண்டனை, சந்திர சேகருக்கு ஆயுள் தண்டனை, பிரபுவுக்கு 1 ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல் மற்றும் 5 ஆயிரம் அபராதம், கிரிதருக்கு ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல் மற்றும் 5 ஆயிரம் அபராதம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

GOKULRAJHONOURKILLING, YUVARAJ

மற்ற செய்திகள்