'சென்னை'யில் வேலையின்றி... 'சொந்த' ஊருக்கு சென்ற இளைஞர்களுக்கு... கைகொடுத்த ஆடுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் சென்னையில் வேலையின்றி சொந்த ஊருக்கு சென்ற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு பெரிதும் உதவியுள்ளது.
கொரோனாவால் உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு நமது ஊரும் விதிவிலக்கல்ல. குறிப்பாக இளைஞர்களின் சொர்க்கபுரியாக திகழ்ந்த சிங்கார சென்னை தற்போது கொரோனாவால் களையிழந்து காணப்படுகிறது. இதனால் இளைஞர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் கையில் வேலையில்லை நிலைமை சீராக இன்னும் சில மாதங்கள் ஆகும் அதுவரை என்ன செய்வது? என்று யோசித்த இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு தற்போது கைகொடுத்துள்ளது. சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்கள் ஆடு,மாடு வளர்க்கும் பணியை கையிலெடுத்து இருக்கின்றனர்.
மொத்தத்தில் பணியின்றி தவித்தவர்களுக்கும், வருமானம் இன்றி முடங்கி கிடந்தவர்களுக்கும் ஆடு,மாடு வளர்ப்பு வருமானம் தரும் துருப்பு சீட்டாக மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல.
மற்ற செய்திகள்