பக்கத்து வீட்டு காரர் இப்படி செய்யலாமா... பாவம் தாய் கோழி... நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற சிறுமி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருத்தாசலம்: கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  தாய் கோழியுடன் வந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கத்து வீட்டு காரர் இப்படி செய்யலாமா... பாவம் தாய் கோழி... நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற சிறுமி!

தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக கடந்து செல்லக்கூடிய காட்சிகள் நிறைய உள்ளன. கோழியை திருடுவதும், ஆட்டை திருடுவது போன்ற காமெடி காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்தும்.  நடிகர் செந்தி கவுண்டமணி வீட்டு கோழியை திருடி அவரிடமே விலை பேசுவது,  ஆட்டை திருடி வடிவேல் மாட்டி கொள்வது போன்ற காட்சிகளை இன்றளவும் மறக்க முடியாது. ஆனால், கடலூரில் ஒரு சிறுமி தாய் கோழிக்கு நீதி வேண்டி காவல் நிலையம் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girl who went to the police station to seek justice for mother chicken

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்காமன். இவர் தனது வீட்டில் கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இதனை வளர்க்க அவரது மகள் விசாகாவும் உதவியாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கோழி ஒன்று முட்டையிட்டு குஞ்சு பொறித்தது.

என்னடா இது.. அடுப்புல வைக்காமலே குக்கர்ல விசில் சத்தம் வருது.. திறந்து பார்த்தபோது... ஷாக் ஆன குடும்பம்

கோழியை செல்லமாக பார்த்து பாதுகாத்து வந்திருந்தார் விசாகா. குஞ்சுகள் பிறந்த நாட்களே ஆன நிலையில், மர்மமான நிலையில் இறந்து கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விசாகா, இதுகுறித்து தந்தை கதிர்காமனிடம் தெரிவித்து. வீட்டில் நாம் வளர்க்கும் பிராணிகளுக்கு அன்பு செலுத்தும் குழந்தைகள் அதன் பிரிவை தாங்குவது கடினம் தான். மனிதனாக இருந்தாலும் சரி, கோழியாக இருந்தாலும் சரி எல்லாம் உயிர் தானே.

girl who went to the police station to seek justice for mother chicken

அப்படி விசாகாவுடன் விளையாடி திரிந்த கோழி குஞ்சுகள் இறப்பை அந்த பிஞ்சு மனம் எப்படி ஏற்றுகொள்ளும். இந்நிலையில், கோழிக்குஞ்சுகளை பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. கோழிக்குஞ்சுகளை விஷம் வைத்து கொன்றதால் ஏமாற்றம் அடைந்த சிறுமி தந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ஆஹா.. வீசுன வலையில தானா வந்து விழுந்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் மீனவருக்கு அடித்த மெகா ஜாக்பாட்!

girl who went to the police station to seek justice for mother chicken

தாய் கோழி மற்றும் இறந்து போன கோழிக்குஞ்சுகளுடன் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தந்தையுடன் சென்ற சிறுமி, தாய் கோழிக்கு நீதி வேண்டும், குஞ்சுகளை விஷம் வைத்து கொன்றுவிட்டதாக புகாரளித்தார். சிறுமியின் செயலை கண்டு நெகிழ்ந்து போன காவலர்கள், இந்த சிறு வயதில் கோழிகள் மீது இப்படி ஒரு பிரியமா என்று ஆச்சர்யப்பட்டனர்.

GIRL WHO WENT TO THE POLICE STATION, MOTHER CHICKEN, COMPLAINT AGAINST THE PERSON, விருத்தாசலம்

மற்ற செய்திகள்