'எங்கம்மாவ கைதுசெய்யாதீங்க'... 'போலீசார் முன் கைகூப்பி கதறி அழுத சிறுமி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட தாயை கைதுசெய்ய வேண்டாம் என, கண்ணீர் மல்க சிறுமி ஒருவர் கதறிஅழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'எங்கம்மாவ கைதுசெய்யாதீங்க'... 'போலீசார் முன் கைகூப்பி கதறி அழுத சிறுமி'!

கோவை மாவட்டம் போகம்பட்டி பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் செய்யும் பணிக்காக அதிகாரிகள் வந்தனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் அங்கு திரண்டு, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர்.

இதற்கிடையில் தங்களது இடத்தில் அளவீடு பணி நடப்பதையும், அதனைத் தடுக்க முயன்றவர்களை கைது செய்து அழைத்து சென்றதையும் பார்த்து அங்கிருந்த சிறுமி ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், 'ஏன் இப்படி பண்றீங்க, எங்கள் நிலத்தை பறிச்சிடாதீங்க, என்று கதறி அழுததோடு, தனது தாயை கைது செய்ய வேண்டாம் என கண்ணீர் மல்க, போலீசாரிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து யாரையும் கைதுசெய்யவில்லை என போலீஸ் அதிகாரிகள் கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர். 

GIRL, VIRAL, COIMBATORE