"அவளுக்காக தான் ஆணா மாறுனேன்.." 40 வயதாக குறைந்த ஆயுட்காலம்??.. காதலுக்காக போராடிய பெண்.. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன??
முகப்பு > செய்திகள் > தமிழகம்தான் காதலித்து வந்த பெண்ணிற்காக, ஆணாக பெண் ஒருவர் மாறிய நிலையில், இது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை அடுத்த பழைய வத்தலகுண்டு என்னும் இடத்தை சேர்ந்தவர் சவுமியா. இவரும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி தேவி என்பவரும் சமூக வலைத்தளம் மூலம் பழகி, காதலித்து வந்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல், சவுமியாவிற்காக ஒரு ஆணாகவும் தன்னை மாற்றிக் கொள்ள நந்தினி தேவி முடிவு செய்துள்ளார். தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தன்னை ஆணாக மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சை ஒன்றையும் நந்தினி தேவி எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் தனது பெயரையும் நந்தினி தேவி என்பதில் இருந்து, யஷ்வந்த் என்றும் மாற்றி உள்ளார்.
யஷ்வந்த் என்கிற நந்தினி தேவியும், சவுமியாவும் பின்னர் திருமணமும் செய்து கொண்டு, தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி தகவலறிந்த சவுமியாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள், இருவரையும் பிரித்து, சவுமியாவை அழைத்து சென்றுள்ளனர்.
இதனால், தனது மனைவி சவுமியாவை மீட்டுத் தர வேண்டுமென போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார் யஷ்வந்த் என்கிற நந்தினி தேவி. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சவுமியாவுக்கு யஷ்வந்த்துடன் வர விருப்பம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், நிச்சயம் சவுமியா அப்படி சொல்லி இருக்க மாட்டார் என்றும், குடும்பத்தின் வற்புறுத்தலால் அவர் அப்படி சொல்லி இருப்பார் என்றும் யஷ்வந்த் குறிப்பிட்டிருந்தார்.
அதே போல, தன்னுடைய காதலிக்காக ஆணாக மாற அறுவை சிகிச்சை கொண்ட யஷ்வந்த் என்கிற நந்தினி தேவியின் ஆயுட்காலம், 35 முதல் 40 ஆண்டுகளாக குறைந்துள்ளதாகவும், உயிரை பயணம் வைத்து சேர்ந்து வாழ ஆசைப்பட்டதாகவும் யஷ்வந்த் கூறி இருந்தார்.
இந்நிலையில், தனது மனைவி சவுமியாவை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என வழக்கு ஒன்றையும் யஷ்வந்த் என்கிற நந்தினி தேவி வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, யஷ்வந்த் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் மனைவி சவுமியாவுக்கு 21 வயதாகிறது என்றும், எனவே அவர்கள் சொந்த விருப்பப்படி வாழ அனுமதிப்பதாகவும் உத்தரவிட்டனர். இதன் பின்னர், காவல்துறை உதவியை யஷ்வந்த் நாடி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், தற்போது நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்