'கடத்தி, அடைச்சு வெச்சு.. பாலியல் தொழிலில்'.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. பெண்கள் உட்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்13 வயது சிறுமியை கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்துக்காக கரூரைச் சேர்ந்த 5 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு வெங்கமேட்டைச் சேர்ந்த சரண்யா என்கிற 13 வயது சிறுமி திருப்பூருக்குக் கடத்திச் செல்லப்பட்டார். அங்கு அவர் அடைத்துவைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து இந்த குற்ற வழக்குடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக இவ்வழக்கை விசாரித்த கரூர் மகிளா விரைவு நீதிமன்றம், இதில் 2 பேரை முறையான சாட்சியங்கள் இல்லாததால் விடுவித்திருந்தது.
இந்த நிலையில், சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மீதமுள்ள 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், அனைவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதத்தொகையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.