'இது தெரிஞ்சிருந்தா கொஞ்சம் லேட்டா போட்டிருக்கலாமோ'... 'தடுப்பூசி போட வைக்கணும்'... வேற லெவல் ரூட் எடுத்த சென்னை இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்களைத் தடுப்பூசி போட வைக்க இளைஞர்கள் சிலர் எடுத்துள்ள முயற்சி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு வாரத்திற்கு முன்பு வரை ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையில் படுக்கை போன்ற வசதிகள் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தார்கள். இதையடுத்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்திலிருந்த சென்னையில் மெல்ல மெல்லப் பாதிப்புகள் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பொது முடக்கம் மற்றும் தடுப்பூசி தான். இருப்பினும் இன்னும் சில மக்களிடையே தடுப்பூசி குறித்த பயம் போகவில்லை. இதன் காரணமாக அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
தற்போதைய சூழலில் கொரோனாவை வெல்லத் தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்பதால், சென்னையைச் சேர்ந்த சில இளைஞர்கள் வித்தியாசமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்கள். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பிரியாணி, குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்க நாணயம், மற்றும் பல பரிசுகள் வழங்கப்படும் என அந்த இளைஞர்கள் அறிவித்துள்ளார்கள்.
சென்னையை அடுத்துள்ள கோவளம் பகுதியில் கோவிட் இல்லாத கோவளம் என்பதை இலக்காகக் கொண்டு இவ்விளைஞர்கள் மேற்கொண்டுள்ள நூதன முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. பிரியாணி மற்றும் பரிசுப் பொருட்கள் பற்றிய அறிவிப்பால் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகக் கூறும் கோவளம் பகுதி மக்கள் தற்போது அதற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கிவிட்டனர்.
மற்ற செய்திகள்