ஆத்தாடி எவ்ளோ பெருசு..! சாலையை கடக்க முயன்ற ‘ராட்சத’ மலைப்பாம்பு.. உடனே வாகன ஓட்டிகள் செய்த செயல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாலையை கடக்க முயன்ற ராட்சத மலைப்பாம்பு போட்டோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்தாடி எவ்ளோ பெருசு..! சாலையை கடக்க முயன்ற ‘ராட்சத’ மலைப்பாம்பு.. உடனே வாகன ஓட்டிகள் செய்த செயல்..!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி பகுதியில் இருந்து மாவனல்லா செல்லும் சாலையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றதை கண்டதும் உடனே வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து மலைப்பாம்பு சாலையை கடந்து செல்வதற்காக எதிரே வந்த வாகனங்களையும் நிறுத்தி உதவியுள்ளனர். இதனால் மலைப்பாம்பு எவ்வித பாதிப்பும் இன்றி சாலையை கடந்து சென்றது. இதனை அங்கிருந்த சிலர் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Giant mountain snake crossing the road in Nilgiris

பெரும்பாலும் இப்பகுதியில் இரவு நேரங்களில் இதுபோல சாலையை கடக்கும் மலைப்பாம்புகள் அடிக்கடி வாகனத்தில் சிக்கி உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் மலைப்பாம்பு சாலையை கடப்பதற்காக வாகனங்களை நிறுத்திய செயல் பலரிடம் பாராட்டை பெற்று வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

MOUNTAIN SNAKE, NILGIRIS

மற்ற செய்திகள்