அந்த குறிப்பிட்ட ‘நேரத்தை’ தவிர இனி எல்லோரும் பயணிக்கலாம்.. தெற்கு ரயில்வே ‘முக்கிய’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை புறநகர் ரயிலில் இன்று முதல் குறிப்பிட்ட நேரத்தை தவிர அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் சென்னையில் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை அடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியதும் நிறுவனங்கள், அலுவலங்கள் செயல்பட தொடங்கின. இதனால் ரயில்வே ஊழியர்கள், வங்கி, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக குறிப்பிட்ட ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இன்று முதல் சென்னை புறநகர் ரயில் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ‘Non Peak hours’ எனப்படும் கூட்ட நெரிசல் குறைவாக உள்ள நேரத்தில் மட்டும் அனைவரும் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் 9:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 7 மணி வரையிலான நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் புறநகர் ரயிலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புறநகர் நகர் பயணிகள் அனைவரும் ஒருவழி டிக்கெட் மட்டுமே கவுன்டர்களில் பெற முடியும் என்றும், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்