"இந்த முடிவை ஏற்கிறேன்.. ஆனால்".. பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் ஆன காயத்ரி ரகுராம் பரபரப்பு ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

"இந்த முடிவை ஏற்கிறேன்.. ஆனால்".. பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் ஆன காயத்ரி ரகுராம் பரபரப்பு ட்வீட்..!

Also Read | பரபரப்பா மேட்ச் நடக்கும்போது.. ரசிகர்கள் போட்ட கோஷம்.. மொத்த ஸ்டேடியமும் அப்படியே ஷாக் ஆகிடுச்சு.. வைரலாகும் வீடியோ..! FIFAWC2022

தமிழக பாஜகவின் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் காயத்ரி ரகுராம். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் முறையில் நடந்து கொண்டதாலும் காயத்ரி ரகுராமை அவர் வகித்த பதவிகளில் இருந்து ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

Gayathri Raguram Suspended for 6 months says TN BJP leader Annamalai

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்,"காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த இடைநீக்கத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இருப்பினும் தேசத்துக்காக தொடர்ந்து இயங்குவேன் எனவும் காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் தொடர்ந்து பேசுவார்கள். யாராலும் அதனை தடுக்க முடியாது இடைநீக்கம் செய்யப்பட்டாலும் தேசத்துக்காக தொடர்ந்து இயங்குவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Also Read | பிரதமர் மோடியிடம் முதன்முதலில் ஜடேஜாவை அறிமுகம் செய்துவைத்த தோனி.. உடனே பிரதமர் சொன்ன விஷயம்.. மனம் திறந்த ஜடேஜா..!

BJP, ANNAMALAI BJP, GAYATHRI RAGURAM, TN BJP LEADER ANNAMALAI, காயத்ரி ரகுராம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மற்ற செய்திகள்