"பாஜகவில் இருந்து விலகுகிறேன்".. பரபரப்பு முடிவை எடுத்த காயத்ரி ரகுராம்!!..
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை காயத்ரி ரகுராம் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Also Read | இளம்பெண் கல்யாணத்துக்காக நிதி உதவி கேட்ட இடத்தில்.. தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்ட கேரள இளைஞர்
தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிகளும் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்ததாகவும் கூறி கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆறு மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு கடந்த நவம்பர் மாதம் நீக்கப்பட்டிருந்தார்.
இது தவிர இன்னும் சில அறிவுறுத்தல்களையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக குறிப்பிட்டிருந்தார். மறுபக்கம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும் நாட்டுக்காக உழைப்பேன் என தெரிவித்திருந்த காயத்ரி ரகுராம், தற்போது வேறு ஒரு பரபரப்பு முடிவையும் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக காயத்ரி ரகுராம் பகிர்ந்த ட்வீட்டில், பாஜகவில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி இந்தியாவின் தந்தை, அவர் எப்போதும் சிறப்புக்கு உரியவர். என்னுடைய விஸ்வ குரு அவர் தான் என்றும் குறிப்பிட்டுள்ள காயத்ரி ரகுராம், அமித்ஷா என்னுடைய சாணக்கிய குருவாக எப்போதும் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எட்டு ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த அனைத்து பாஜகவினருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
Also Read | "என் வாழ்க்கைல கெடச்ச மிகப் பெரிய பரிசு".. 9 வருஷம் கழிச்சு கெடச்ச மனைவி.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த கணவன்!!
மற்ற செய்திகள்