மருத்துவமனைக்குள் புகுந்து 'கொலை' செய்த 'கும்பல்'... ஒரு 'பொண்ணு' பிளான் பண்ணி தான் நடந்துருக்கு... 'மதுரையை' கலங்கடித்த கொலையில் ஷாக்கிங் 'ட்விஸ்ட்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். ரவுடியான இவர், விபத்து ஒன்றில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 5 - ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த முருகனை நேற்று அதிகாலையில் மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியது. அருகில் இருந்த செவிலியர்கள், நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மருத்துவமனை புகுந்து நடந்த இந்த படுகொலை மதுரையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் இந்த கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். ஒரு பெண்ணின் தூண்டுதலின் பெயரில் அதிகாலை மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை அறிந்து கொண்டு இந்த கொலை சம்பவத்தை நடத்தியது தெரிய வந்தது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், வைகையாற்றின் மைய மண்டல பகுதியில் வைத்து கஞ்சா வியாபாரி பட்டா ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன் இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பட்டா ராஜேந்திரனின் மனைவி தனது கணவரின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி, முதல் குற்றவாளியான சந்துரு என்பவரை கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. அப்போது சந்துரு சில காயங்களுடன் தப்பியுள்ளார். தற்போது இரண்டாம் குற்றவாளியான முருகனை மருத்துவமனை புகுந்து கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றுள்ளது.
மருத்துவமனை சுற்றியிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கரும்பாலையை சேர்ந்த அருண் பாண்டியன், விக்னேஷ்வரன், கரன்ராஜ் ஆகியோருடன் மேலும் சிலர் சேர்ந்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்