'பெண்ணின் பெயரில் சிம்கார்டு'... 'எனக்கே தெரியாமல் என் பெயரில் சிம்கார்டா'... 'சென்னையில் சிக்கிய மோசடி கும்பல்'... வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செல்போன் கடைக்கு வருபவர்களின் ஆவணங்களை நகல் எடுத்து, அதில் சிம் கார்டுகளை வாங்கிய மோசடி கும்பல் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

'பெண்ணின் பெயரில் சிம்கார்டு'... 'எனக்கே தெரியாமல் என் பெயரில் சிம்கார்டா'... 'சென்னையில் சிக்கிய மோசடி கும்பல்'... வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!

சென்னை மண்ணடியைச் சேர்ந்த தொழில் அதிபர் திவான் அக்பரைக் கடத்திச் சென்று, 2 கோடி ஹவாலா பணத்தை கொள்ளையடித்ததாக, தவ்பீக், உமா மகேஸ்வரன், ஆல்பர்ட் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். திவான் அக்பரை கடத்திச் சென்ற போது குற்றவாளிகள் பேசிய செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தார்கள். அப்போது அந்த சிம் கார்டு ராயபுரத்தைச் சேர்ந்த மோனிஷா என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவரின் ஆதார் நகலை பயன்படுத்தி பத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது. புதுவண்ணாரப்பேட்டையில் வசிக்கும் அர்ஜூன் என்பவர் மோனிஷா கொடுத்த ஆதார் அட்டையை நகல் எடுத்து, 10 சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். அதை ஒரு கும்பல் வாங்கி கடத்தல் காரர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் செல்போன் கடைக்கு சிம் கார்டு வாங்க வரும்போது கொடுக்கும் ஆதார் ஆவணங்களை நகல் எடுத்து, அதை ஒரு கும்பல் வாங்கி கடத்தல் காரர்களுக்கு விற்பனை செய்வதை தொழிலாக வைத்துள்ளார்கள்.  இது தொடர்பாக, 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சிம்கார்டுகள் மூவாயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்