'எல்லாமே ப்ரீ தான்' ஜாலியா 'படம்' பார்த்துட்டே டிராவல் பண்ணுங்க... முக்கிய அறிவிப்பினை 'வெளியிட்ட' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் இன்று முதல் படங்கள், பாடல்கள் ஆகியவற்றை இலவசமாக கண்டு மகிழலாம் என மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

'எல்லாமே ப்ரீ தான்' ஜாலியா 'படம்' பார்த்துட்டே டிராவல் பண்ணுங்க... முக்கிய அறிவிப்பினை 'வெளியிட்ட' நிறுவனம்!

பயணிகள் வசதிக்காக அதிரடி கட்டண குறைப்பு , பண்டிகை காலங்களில் நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை சென்னை மெட்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பயணிகள் தங்களது ஸ்மார்ட்போன்கள் வழியாக வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்பை இன்ஸ்டால் செய்து அதனை பயன்படுத்தி பல்வேறு மொழிகளில் படங்கள், பாடல்களை இலவசமாக பார்க்கும் வசதியினை மெட்ரோ நிறுவனம் இன்று அறிமுகம் செய்திருக்கிறது.

மெட்ரோ ரெயில் நிலையங்கள், ஓடும் ரெயில்கள் ஆகியவற்றில் அதிவேக இண்டெர்நெட் இணைப்பு செயல்படும். ‘சுகர்பாக்ஸ்’ என்ற தலைப்பில் உள்ள ஆன்லைன் ஆப் பயன்பாடு மூலம் எந்தவித இடையூறுமின்றி மெட்ரோ ரெயில் பயணிகள் பொழுது போக்கு வசதியை பெற முடியும். தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இந்த வசதியை பெறலாம்.

விரைவில் வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையத்துக்கும் இந்த வசதி நீட்டிக்கப்பட உள்ளது. ஒருசில நிமிடங்களில் ஒரு முழுப்படத்தையே பயணிகள் டவுன்லோடு செய்து கொள்ளலாம், ஆனால் வைஃபை இண்டெர்நெட் மூலம் போன் பேச முடியாது  என இதுகுறித்து மெட்ரோ நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.