அரசு பள்ளிகளில் இனி காலை சிற்றுண்டி..அரசாணை வெளியீடு.. அடேங்கப்பா மெனு செம்மையா இருக்கே..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இயங்கிவரும் அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரம் முழுவதும் வழங்கப்பட இருக்கும் உணவுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
சிற்றுண்டி
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவு செய்வதை முன்னிட்டு கடந்த மே 7 ஆம் தேதி சட்ட சபையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக இப்பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெனு
தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் வாரத்தின் ஒவ்வொரு நாளும் வழங்கப்பட இருக்கும் உணவுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி வாரத்தின் முதல் நாளான திங்கட் கிழமை அன்று, அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.ஆகியவை பரிமாறப்படும்.
செவ்வாய்க் கிழமைகளில் ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி உள்ளிட்டவை தயார் செய்யப்பட இருக்கிறது. அதேபோல, புதன் கிழமைகளில் வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும், வியாழக்கிழமைகளில் அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பாரும், வெள்ளிக் கிழமைகளில் ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரியும் வழங்கப்பட உள்ளன.
இதுமட்டும் அல்லாமல் வாரத்தில் இரண்டு நாட்களில் உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களை கொண்டு உணவு சமைக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
Also Read | செங்குத்தான பாறைல வெறுங்காலோடு அசால்ட்டாக ஏறிய வயசான துறவி .. ஆடிப்போன மலையேறும் வீரர்கள்..
மற்ற செய்திகள்