'டிரான்ஸ்ஃபர் பண்ண சொல்லல...' 'நேரடியா பேங்குக்கு தானே கூப்டுறாங்க...' 'அப்போ நம்பி எடுத்திட்டு போலாம்...' - பேங்க் வாசலில் காத்திருந்த 'அதிரடி' டிவிஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவரின் செல்போன் எண்ணுக்கு இந்தியன் வங்கி மேலாளர் எனக் கூறி ஒருவர் பேசியுள்ளார்.

'டிரான்ஸ்ஃபர் பண்ண சொல்லல...' 'நேரடியா பேங்குக்கு தானே கூப்டுறாங்க...' 'அப்போ நம்பி எடுத்திட்டு போலாம்...' - பேங்க் வாசலில் காத்திருந்த 'அதிரடி' டிவிஸ்ட்...!

அப்போது, 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் ,100 ரூபாய் என பழைய காயின், நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வந்திருப்பதாகவும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு வந்து பழைய நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு வந்து கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளார்.

பணப்பரிவர்த்தனை செய்ய சொன்னால் தானே ஆபத்து, இவர் நேரடியாக வங்கிக்கு தானே வர சொல்லியுள்ளார் என நம்பிய வினோத் தனது கடை ஊழியர் பாபுவிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார்.

அப்போது வங்கியின் வாசலிலேயே பாபுவை ஒரு அடையாளம் தெரியாத நபர் வழிமறித்து, ரூபாய் நோட்டு மாற்ற வந்தவரா என கேட்டு அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு, உள்ளே செல்வது போல் போக்கு காட்டி விட்டு தலைமறைவாகியுள்ளார்.

பல மணி நேரம் ஆகியும் உள்ளே சென்ற நபர் வெளியே வரவில்லை. அதன்பின் பாபு வங்கி மேலாளர் அறைக்குச் சென்று விசாரித்தபோது பண மாற்றம் குறித்த அறிவிப்பு இல்லை எனக் கூறியுள்ளனர்.

உடனடியாக நடந்த சம்பவத்தை பாபுகடை உரிமையாளர் வினோத்திடம் கூறி, கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்