வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது கிடைத்த ‘தங்கப்புதையல்’.. உடனே தம்பதி செஞ்ச காரியம்.. அதிகாரிகள் பாராட்டு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை அருகே வீடு கட்டுமானபணியின்போது தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள ஏனாதி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நாகராஜன்-ஜெயலட்சுமி தம்பதியினர். இருவரும் அப்பகுதியில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவா்கள் நேற்று தங்களது இடத்தில் அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்காக தொழிலாளர்கள் அஸ்திவாரத்துக்கு குழித் தோண்டியுள்ளனர். அப்போது மண்ணுக்குள் தங்க நாணயங்களுடன் சிறிய மண்பானை இருந்துள்ளது.
இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த தொழிலாளர்கள், உடனே ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து ஜெயலட்சுமி அளித்த தகவலின்பேரில், பொன்னமராவதி வட்டாட்சியா் ஜெயபாரதி தலைமையிலான வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா்.
இதனைத் தொடர்ந்து மண் பானைக்குள் கிடைத்த 63 கிராம் எடை கொண்ட 16 தங்க நாணயங்களை காவல் துறையினா் முன்னிலையில் நாகராஜன்-ஜெயலட்சுமி தம்பதியினா் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். இவா்களின் நேர்மையை பாராட்டி வருவாய்த் துறையினா் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனா்.
இந்த தங்க நாணயங்கள் முகலாயர் காலத்து நாணயங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனாலும், உரிய ஆய்வுக்கு பிறகே தங்க நாணயங்கள் குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 16 தங்க நாணயங்களும் பொன்னமராவதி சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. வீட்டுக்கு அஸ்திவாரம் கட்ட குழி தோண்டியபோது பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்