'எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே கட்சி பணி'... 'முன்னாள் சபாநாயகர் 'பி.எச். பாண்டியன்' காலமானார்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் காலமானார்.

'எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே கட்சி பணி'... 'முன்னாள் சபாநாயகர் 'பி.எச். பாண்டியன்' காலமானார்'!

எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பி.எச்.பாண்டியன். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் பிறந்த இவர், திருநெல்வேலி மாவட்டத்தில், சேரன்மகாதேவி சட்டப்பேரவை தொகுதி இருந்தபோது 1977, 1980, 1984, 1989-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 முறை அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றிருந்தார். 1999 திருநெல்வேலி மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு வென்றுள்ளார். மேலும் தமிழக சட்டசபையின் சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.

இவரது மகன் மனோஜ்பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பி.எச். பாண்டியன் மனைவி சிந்தியா பாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்தவர். இதனிடையே பி.எச். பாண்டியனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார். அவருக்கு அதிமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

AIADMK, MGR, TAMIL NADU ASSEMBLY SPEAKER, PH PANDIAN, AIADMK