“தண்ணி கொடு.. தண்ணி கொடு..” எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர்.. ஆர்ப்பாட்டத்தில் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது முன்னாள் அமைச்சர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, திமுக அரசு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். அப்போது, அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை திடீரென மயங்கி விழுந்தார்.
கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது வண்ணாரப்பேட்டை 49-வது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்துச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளr எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சிறையில் உள்ள ஜெயக்குமாரை சந்தித்து பேசினர்.
இநத நிலையில், ஜெயக்குமார் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை தாங்கிப் பிடித்த எடப்பாடி பழனிசாமி, அவருக்கு தண்ணீர் கொடுக்க கூறினார். இதனை அடுத்து தெளிவான அவர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
‘ஆமா.. உக்ரைன் சொன்னது உண்மைதான்’.. முதல் முறையா அந்த விஷயத்தை ஒப்புக்கொண்ட ரஷ்யா..!
மற்ற செய்திகள்