'நாடோடிகள்' பட நடிகை அளித்த பாலியல் புகார்...! 'முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு...' - கைது செய்ய போலீசார் தீவிரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சில விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியின் போது சில ஆண்டுகள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது கடந்த மே 28ம் தேதி நாடோடிகள் படத்தில் நடித்த சாந்தினி சென்னை காவல் ஆணையத்தில் பாலியல் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில் மணிகண்டனுடன் திருமணம் செய்யாமல் 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், 3 முறை கருக்கலைப்பு செய்ய மணிகண்டன் வற்புறுத்தியதாகவும் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனோ, அந்த பெண்மணி யாரென்று தெரியாது எனவும், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டிய போது தான் பணாம் தர மறுத்ததால் எனது மீது பொய் புகார் கூறியிருந்தார்.
மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவரின் வழக்கு வழக்கு அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது..
அதோடு, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 313 (பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு), 323 ( தாக்குதல், காயம் உண்டாக்குதல்), 417 ( ஏமாற்றுதல், சீட்டிங்) 376 ( பாலியல் வன்கொடுமை), 506(1) (கொலை மிரட்டல்), 67 (IT Act) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட்ட சில வழக்குகளில் ஜாமீனில் வெளிவர முடியாது. தற்போது மணிகண்டன் முன்ஜாமீன் கோரினாலும் கிடைக்க வாய்ப்பில்லை. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ளார் அவரைக் கைது செய்வதற்காக போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்
மேலும், மணிகண்டனை கைது செய்ய, ஆதாரங்களுடன் சென்னை காவல்துறை நேற்று இரவு முதல் ராமநாதபுரத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும் அவரின் உதவியாளர் பரணி போலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்