'காணாம போய் அஞ்சு மாசம் ஆயிருக்கு...' 'திடீரென ரெண்டு எடத்துல இருந்து வந்த தகவல்...' - உடனே வனத்துறையினர் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காணாமல் போன இரு ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கண்டெடுக்கப்படுள்ளதாக வனப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 27-ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் உள்ள வனப் பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது சுடும் பயிற்சியில் ஈடுபட்ட, கோயம்புத்தூர் மதுக்கரையில் உள்ள இந்திய ராணுவத்தின் பீரங்கிகள் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ராக்கெட் லாஞ்சர் ஏவும் போது, அங்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த இரு லாஞ்சர் குண்டுகளை காணவில்லை.
இதுகுறித்து வையம்பட்டி காவல் நிலையத்திலும் ராணுவ வீரர்களால் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காணாமல் போன இரு லாஞ்சர் குண்டுகளும், தோகைமலை காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட கருங்கல்பட்டி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒன்றும், மணப்பாறை காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட மத்தகோடங்கிப்பட்டி கிராமத்தில் மற்றொன்றும் கண்டுபிடித்துள்ளதாக வனத்துறையினர் தகவல் அளித்தனர். அதோடு இதுகுறித்து கோயம்புத்தூர் பீரங்கி படைபிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்