"திரும்பி வாடா.. இனி யாருக்குடா நான் இதெல்லாம் செய்வேன்!".. மசினகுடி யானையின் தும்பிக்கையை பிடித்தபடி அழும் வன அதிகாரி.. இதயம் நொறுங்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மசினகுடி பகுதியில் சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் பல மாதங்களாக சுற்றி வந்தது.

"திரும்பி வாடா.. இனி யாருக்குடா நான் இதெல்லாம் செய்வேன்!".. மசினகுடி யானையின் தும்பிக்கையை பிடித்தபடி அழும் வன அதிகாரி.. இதயம் நொறுங்கும் சம்பவம்!

வனத்துறையினர் அதற்கு பழங்களுக்குள் மருந்து மாத்திரைகளை மறைத்து வைத்து வழங்கி வந்தனர். ஆனாலும் குணமாகாத அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து அதன் காயத்துக்கு சிகிச்சை அளித்தனர்.  இந்நிலையில் தான் கடந்த 19- ம் தேதி இந்த காட்டு யானைக்கு தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிக்க லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மசினகுடி மாவனல்லா பகுதியில் அந்த யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து யானை மீது வீசியதும், இதில் பிரசாத் (வயது 36), ரேமண்ட் டீன் (28) , ரிக்கி ராயன் (31) ஆகிய 3 பேர் ஈடுபட்டதும் தெரியவந்தது.  இந்த சம்பவம் வீடியோவாகவும் வெளியாகி காண்போரின் இதயத்தை நொறுங்கச் செய்தது. இவர்களுள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தேடப்பட்டு வருகிறார். இதனிடையே காட்டுயானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக  நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் சம்மந்தப்பட்ட தனியார் விடுதிக்கு வனத்துறையினர் சீல் வைத்தனர்.

ALSO READ: “யாருங்க சொன்னா? நான் உசுரோடா தான் இருக்கேன்.. நம்புங்க!”.. ‘இறந்ததாக’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண்.. ‘உயிருடன் இருப்பதை நிரூபிக்க’ 3 வருடமாக போராட்டம்!

இந்நிலையில், மசினகுடியில் உயிரிழந்த அந்த காட்டு யானையின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத வனத்துறை அதிகாரி ஒருவர், உயிரிழந்த பின் வண்டியில் ஏற்றப்பட்ட யானையின் தும்பிக்கையை பிடித்தபடி, “திரும்பி வாடா.. இனி யாருக்கு நான் பழங்கள் கொடுப்பேன்” என அழுகிற புகைப்படம் இணையத்தில் பரவி கண்கலங்க வைத்துள்ளது.

மற்ற செய்திகள்