'214'-வது முறையாக 'வேட்புமனு' தாக்கல்... 3 முறை 'லிம்கா' சாதனை...விரைவில் 'கின்னஸ்'... "பட்... எனக்கு தோல்விதான் முக்கியம்..."
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேட்புமனுத் தாக்கல் செய்தே சாதனை செய்யத் துடிக்கும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தற்போது 214வது முறையாக வேட்புமனுத்தாக்கல் செய்து கின்னஸ் சாதனைக்கு முயற்சித்து வருகிறார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது.
இந்த தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் தலா 3 இடங்களில் போட்டியிட உள்ளன. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 10,000 ரூபாய் டெபாசிட் தொகையும், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன் மொழிவும் அவசியம்.
இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் என்பவர் 214 வது முறையாக சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் இவர் தற்போது தனக்கு வெற்றி முக்கியமல்ல தோல்வியே முக்கியம் என்று தெரிவித்துள்ளார். அதிக முறை வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதால் இவர் 3 முறை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கின்னஸ் புத்தகத்தில் விரைவில் இடம்பிடிப்பதே தமது லட்சியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.