Video: 'நல்லா' பண்ணுங்க.. நாங்க 'இருக்கோம்னு' சொல்றாங்க.. ரியல் 'சிங்கப்பெண்ணின்' Exclusive இண்டர்வியூ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெருநகரங்களில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் தற்போது பெண்களையும் வேலைக்கு எடுத்து கொள்கின்றன. குறிப்பாக வாழ்க்கையில் கஷ்டப்படும் பெண்களுக்கு உணவு டெலிவரி செய்யும் வாய்ப்பை அந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

Video: 'நல்லா' பண்ணுங்க.. நாங்க 'இருக்கோம்னு' சொல்றாங்க.. ரியல் 'சிங்கப்பெண்ணின்' Exclusive இண்டர்வியூ!

இதுதொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்தவகையில் குழந்தையுடன் சென்று உணவு டெலிவரி செய்யும் பெண்ணின் புகைப்படம் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

டிவிஎஸ் 50 வண்டியில் குழந்தையை தன்னுடன் சேர்த்து கட்டிக்கொண்டு அந்த பெண் உணவு எடுத்து செல்வது போன்ற புகைப்படம், நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையான சிங்கப்பெண் இவர்தான் என்றும், வாழ்க்கையில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் என்றும் நெட்டின்சன்கள் அவரை பாராட்டி தள்ளினர்.

இந்தநிலையில் இவர் போன்ற ரியல் சிங்கப்பெண்களை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி, அவரது பணியை ஊக்குவிக்கும் வகையில் நமது Behindwoods Air அவரை பேட்டி எடுத்தது. வீடியோ பார்த்து பலரும் அவரை மனமார பாராட்டி வருகின்றனர். பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் ஊக்கம் அளிக்கும் இவரது வீடியோவை பார்த்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.