'உணவு டெலிவரி என்ற பெயரில் கஞ்சா'... அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை மாநகர ஆணையர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உணவுப் பொருட்கள் பார்சலை வாகனங்கள் வாயிலாக சப்ளை செய்யும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் சிலர் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், முக்கிய உத்தரவு ஒன்றைச் சென்னை மாநகர ஆணையாளர் பிறப்பித்துள்ளார்.
சென்னை எழும்பூர் நரியங்காடு போலீஸ் குடியிருப்பில் ரூ.10 லட்சம் செலவில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்-சிறுமிகள் விளையாடும் மைதானம், பெரியவர்கள் நடைப்பயிற்சி பாதை மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இந்த பூங்காவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்துவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், உணவுப் பொருட்கள் பார்சலை வாகனங்கள் வாயிலாக விநியோகம் செய்யும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் சிலர் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும் போது, அவர்கள் போலீசாரின் நன்னடத்தை சான்றிதழ்கள் பெறவேண்டும் என்ற புதிய நடைமுறையைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றச் செயல்கள் தடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்