சசிகலாவைத் தொடர்ந்து.. அவருடன் சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை!.. வெளியான பரபரப்பு முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரில் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் என சிறையில் அவஸ்தைப்பட்ட சசிகலாவுக்கு உடனடியாக பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் உறுதியானது.
இதுபற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியான அறிக்கையின் மூலம் அவருடைய நுரையீரலில் தொற்று தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது தெரியவந்தது. முன்னதாக அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்த நிலையில்தான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய ஆக்சிஜன் அளவு உயர தொடங்கியதாகவும், நுரையீரல் தொற்று குறைந்ததாகவும், ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சசிகலாவைப் போலவே இளவசியும் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க அழைத்துச் செல்லப்படுவதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது. அதனடிப்படையில் இளவரசிக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்