சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவே முதல்முறை.. யார் இந்த ப்ரியா ராஜன்..? சுவாரஸ்ய பின்னணி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக சார்பாக சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நகரபுற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. இந்த முறை சென்னை மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்குப் பிரியா ராஜன் போட்டியிடுவதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 28 வயதான இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 74-வது வார்டில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட 6299 வாக்குகள் அதிகம் பெற்று பிரியா ராஜன் வெற்றிபெற்றார்.
இந்தமுறை சென்னை மேயர் பதவி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் பிரியா ராஜன் சென்னையில் மூன்றாவது பெண் மேயராகப் பதவியேற்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் வடசென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர் என்ற பெருமையும் பிரியா ராஜன் பெற உள்ளார்.
இதற்கு முன்பு தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்களே மேயராகப் தேர்வாகி வந்தார்கள். நாளை (04.03.2022) நடைபெற இருக்கும் மறைமுக தேர்தலில் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டு மேயராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்