வரியா, 'சோப் போட்டு கை கழுவ ரெடியா' ... ஆடல் பாடலுடன் கொரோனா விழிப்புணர்வு ... அசத்திய தீயணைப்பு படையினர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள், நடனமாடிக் கொண்டே கை கழுவுவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகளிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை சானிட்டிசர் அல்லது சோப் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தீயணைப்பு படை வீரர்கள் சாலையின் நடுவே நின்று கொண்டு கைகளை எப்படி சோப் அல்லது சானிட்டிசர் பயன்படுத்தி கழுவ வேண்டும் என்று நடனமாடிக் கொண்டே செய்து காட்டி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை இந்தியாவின் பல பகுதியிலுள்ள அரசு அதிகாரிகள் இது போன்ற வித்தியாசமான முறைகளை பயன்படுத்தி மக்களிடையே சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
PUDHUKOTTAI FIRE SERVICE DEPARTMENT...#CORONAAWARENESS
புதுக்கோட்டையில் புதுப்பேட்டை...
The genius @selvaraghavan pic.twitter.com/gBLrazEOyL
— Devaraj Durgeshwaran (@indcitizen_3d) March 23, 2020