சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. வெளியான பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில் எதிரே ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளி, புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. இங்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகளும் உள்ளது.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று (27.04.2022) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கல்லீரல் சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த சில நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். தீ மளமளவென பரவத்தொடங்கிய நிலையில், உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கல்லீரல் சிகிச்சை பிரிவில் சிக்கிக்கொண்டிருந்த நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட வளாகத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு சிலிண்டர் வெடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்த மற்ற சிலிண்டர்கள் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது. தீ விபத்து தகவலறிந்து விரைந்து வந்த அமைச்சர் சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்