திடீரென வீட்டிற்குள் இருந்து வந்த அலறல் சத்தம்.. ஓடி போய் பார்த்து துடிதுடித்து போன பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![திடீரென வீட்டிற்குள் இருந்து வந்த அலறல் சத்தம்.. ஓடி போய் பார்த்து துடிதுடித்து போன பெற்றோர்! திடீரென வீட்டிற்குள் இருந்து வந்த அலறல் சத்தம்.. ஓடி போய் பார்த்து துடிதுடித்து போன பெற்றோர்!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/photo-final-year-medical-student-took-a-wrong-decision-near-madurai-thum.jpg)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் பால்ராஜ். கேபிள் ஆப்பரேட்டராக பணிபுரிந்துவரும் இவருக்கு நிவேதா(22) என்ற மகளும் சபரி(17) என்ற மகனும் உள்ளனர்.
நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்தார். சபரி, வடமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு அளிப்பதற்காக சொந்த ஊர் திரும்பியிருக்கிறார் நிவேதா.
வீட்டில் யாருமில்லை
நேற்று மாலை பால்ராஜ் தனது மனைவியுடன் வெளியே சென்றிருக்கிறார். வீட்டில் நிவேதா மற்றும் அவரது தம்பி சபரி மட்டுமே இருந்துள்ளனர். அப்போது, குளியலறைக்கு சென்ற நிவேதா கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது நிவேதா சத்தம் எழுப்பியதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
குளியலறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிவேதாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சபரி தனது பெற்றோருக்கு தகவல் கொடுக்கவே, பதற்றத்துடன் ஓடிவந்த பால்ராஜ் தம்பதி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நிவேதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நிவேதா பரிதாபமாக உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
வழக்குப் பதிவு
இதனை அடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் விரைந்து சென்று, நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிவேதா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன காரணத்திற்காக மருத்துவ மாணவி நிவேதா இப்படி ஒரு முடிவை எடுத்தார்? என்ற கேள்விக்கு இந்த விசாரணை விரைவில் பதில் அளிக்கும் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் வடமதுரை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மற்ற செய்திகள்