'சென்னையில் மட்டுமா? இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'!.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவை தடுக்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது மேலும் மூன்று மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக மதுரையில் நாளை 23-ஆம் தேதி முதல், 30ஆம் தேதி இரவு வரை ஊரடங்கு இருக்கும் என்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள் திறக்கப்படும் என வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்றும் இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி வரையே கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்