"அப்பா செல்போன்ல ஆபாசப்படம் பாப்பாரு! அவர் இல்லாதப்போ".. 'திருச்சி' சிறுமிக்கு 'பாலியல் தொல்லை' கொடுத்து 'கொன்ற' சிறுவன் 'பகீர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மேல சமுத்திரம் கிராமத்தில் பூப்பறிக்கச் சென்ற 9 வயது சிறுமி காணாததை அடுத்து அவரை பெற்றோர் தேடினர்.

அப்போது சிறுவன் ஒருவன் கத்திக் குரல் கொடுக்க, அங்குள்ள மல்லிகை தோட்டத்தில் சிறுமி பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது அனைவருக்கும் தெரியவந்தது. அப்போது சிறுமியின் அருகில் ஒரு கல்லும் அதில் சிறுவர் அணியும் சட்டை ரத்தக் கறையுடன் இருந்ததையும், அடுத்து சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து காவல்துறையினர், விரைந்துவந்து அங்கு கிடைத்த சட்டையை மோப்ப நாயின் உதவியுடன் துழாவும்போதுதான் அது சிறுமியைக் காப்பாற்றச் சொல்லி தகவல் தெரிவித்து கத்திய சிறுவனது சட்டை என தெரியவந்தது. பின்னர் சிறுவனைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோதுதான், சிறுவனின் தந்தை செல்போனில் சமூக வலைதளங்களிலும், யூ டியூபிலும் ஆபாச படங்களை வழக்கமாக பார்த்து வந்ததும், அதன் பின்னர் அவர் செல்போனை வைத்துவிட்டுச் செல்லும்போது சிறுவன், தனது தந்தையின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து, வீடியோக்களில் பார்த்ததை செயல்படுத்தி பார்க்கும் ஆசையில், சிறுமியை கவனித்து பின் தொடர்ந்த சிறுவன், ஆளில்லாத இடத்தில் அத்துமீறியுள்ளான்.
இதனால் தனது தாயிடம் சொல்லப் போவதாக சிறுமி கூற, பயந்துபோன சிறுவன், இன்னொரு படத்தில் பார்த்தது போல், ஒரு கல்லை எடுத்து சிறுமியின் தலையில் அடித்துள்ளான். இதனால் சிறுமி ரத்தக்காயத்துடன் மயங்கி விழுந்து உயிருக்குப் போராடியுள்ளார். பின்னர் தனது சட்டையில் ரத்தக் கறை இருந்ததால், சட்டையைக் கழற்றி கல்லுடன் சுற்று அங்கு வைத்துவிட்டு சிறுவன் அங்கிருந்து சென்றுள்ளான் சிறுவன். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்




