"சூப்பர் மார்க்கெட்டில் இருந்த மனுஷன், திடீர்ன்னு".. வெளிநாட்டில் உயிரிழந்த தந்தை.. CCTV பார்த்து கதறிய தமிழக குடும்பம்.. கண்ணீர் மல்க கோரிக்கை!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாரடைப்பு காரணமாக வெளிநாட்டில் உயிரிழந்த தந்தையின் உடலை மீட்டுத் தரக் கோரி, ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மகள் மனு அளித்தது தொடர்பான செய்தி, தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் அன்பு. 54 வயதாகும் இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அன்பு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உயிரிழந்த தந்தை அன்புவின் உடலை மீட்டு சொந்த ஊர் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அவரது மகளான கிரிஜா இறங்கி உள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மக்கள் குறை கேட்பு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க வந்த அன்புவின் மகள் கிரிஜா, சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் பணிபுரிந்து அங்கே உயிரிழந்த தனது தந்தையின் உடலை மீட்டுத் தருமாறு ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து, தமிழக அரசும் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிஜா வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், தந்தை உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கிரிஜாவிடம் உறுதி அளித்துள்ளார்.
இதனிடையே, ரியாத்தில் வைத்து திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த அன்புவின் சிசிடிவி காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. வெளியான சிசிடிவி காட்சிகள் படி, ரியாத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில், பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார் அன்பு. அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே சரிகிறார் அன்பு. இதனைக் கண்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளனர்.
இந்த காட்சிகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதனையும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கையில் அன்புவின் மகள் கிரிஜா ஒப்படைத்துள்ளார்.
மற்ற செய்திகள்