தோப்பில் மர்மமாக உயிரிழந்த அப்பா.. கைதான 3-வது மகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்காசி அருகே முதியவர் உயிரிழந்த வழக்கில் கைதான மகள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தோப்பில் மர்மமாக உயிரிழந்த அப்பா.. கைதான 3-வது மகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

Also Read | இயற்கை உபாதைக்கு சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்.. சீர்காழி அருகே விபரீதம்..!

தென்காசி மாவட்டம் இலஞ்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டைமாடன் (வயது 82.) இவர் கடந்த 4-ம் தேதி தனக்கு சொந்தமான இலஞ்சி செங்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தோப்பில் மர்மமாக உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து அவரது இரண்டாவது மகள் சந்திரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த கோட்டை மாடனின் மூன்றாவது மகள் ஸ்ரீதேவி (வயது 40), மூத்த மகளின் கணவர் பரமசிவன் (வயது 57), வசந்தகுமார் (வயது 37), இலஞ்சி பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த கோட்டை மாடனுக்கு 3 மகள்கள் உள்ளனர். முதியவரான கோட்டை மாடன் தனது இரண்டாவது மகள் சந்திராவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், இவர்க்கு சொந்தமான 1.82 ஏக்கர் தோப்பை மூன்றில் இரண்டு பகுதியை தனது 2-வது மகள் சந்திராவின் மகன் விஜயகுமார் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். இதற்கு ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதனிடையே பரமசிவன் வீட்டில் வேலை பார்க்கும் லோடு ஆட்டோ டிரைவர் சேகர் என்பவரை மூலம் கூலிப்படையை வைத்து கோட்டை மாடனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்காக கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், மகேஷ், ஆகியோரிடம் 1 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாகவும், 15 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து கோட்டை மாடனிடம் தோப்பில் உள்ள மரத்தை விலைக்கு வாங்குவதாக கூறி வசந்தகுமார், மகேஷ் ஆகிய இருவரும் அவரது தோப்புக்கு சென்றுள்ளனர். அப்போது கோட்டை மாடனை ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதில் படுகாமடைந்த கோட்டை மாடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து மூன்றாவது மகள் ஸ்ரீதேவியை கைது செய்து விசாரிக்கையில் இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கோட்டை மாடன் உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சொத்துப் பிரச்சனையில் பெற்ற மகளே கூலிப்படையை வைத்து அப்பாவை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

FATHER, DEATH CASE, DAUGHTER, ARREST, TENKASI, தந்தை, மகள், தென்காசி

மற்ற செய்திகள்