‘1 டன் மீன், 200 கிலோ இறால், 50 கிலோ கோழி...!’ வண்டி வண்டியா வந்த பொருள்.. ஆடி மாச சீரில் மருமகனை ஆடிப்போக வைத்த மாமனார்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரமாண்டமாக மருமகனுக்கு ஆடி சீர் கொடுத்து அசத்திய மாமனாரின் செயல் வியக்க வைத்துள்ளது.
புதுச்சேரி ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர் பவன் குமார். இவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த பிரத்யுஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பிரத்யுஷாவின் தந்தை தனது மருமகனுக்கு வித்தியாசமாக ஆடி மாத சீர் கொடுத்த அசத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆடி சீர் கொடுத்துக் கொண்டாடுவதுபோல், தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாதம் (ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்) ‘பொனாலு’ என்ற நாட்டுப்புற விழாவை கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்துக் கொள்வதால், பிரமாண்டமான முறையில் சீர் செய்ய மாமனார் பலராம கிருஷ்ணா முடிவு செய்துள்ளார்.
அதற்காக 1 டன் மீன்கள், 200 கிலோ இறால், 50 கிலோ கோழி, 10 ஆடுகள் மற்றும் 1 டன் காய்கறிகள், 50 வகையான இனிப்புகள் என வண்டி வண்டியாக மணமகன் வீட்டுக்கு ஊர்வலமாக சீர் கொண்டு வந்துள்ளார். இதைப் பார்த்த மணமகன் மட்டுமல்ல, அப்பகுதி மக்களே ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார்.
மற்ற செய்திகள்