‘ஆக்கிரமிப்பு ஏரியை மீட்ட சமூக ஆர்வலர்’.. வீடு திரும்பும் வழியில் நடந்த கொடூரம்..! அதிர்ச்சியில் உறைந்த ஊர்மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆக்கிரமிப்பு ஏரியை மீட்ட சமூக ஆர்வலரையும் அவரது தந்தையையும் மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆக்கிரமிப்பு ஏரியை மீட்ட சமூக ஆர்வலர்’.. வீடு திரும்பும் வழியில் நடந்த கொடூரம்..! அதிர்ச்சியில் உறைந்த ஊர்மக்கள்..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் நல்லதம்பி. இவர் அப்பகுதியில் நிகழும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் முதலைப்பட்டியில் உள்ள 40 ஏக்கர் ஏரியை சிலர் ஆக்கிரமிப்பு செய்யததாக கூறப்படுகிறது.

இதனால் நல்லதம்பி இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். நல்லதம்பி தகுந்த ஆதாரங்களை சமர்பித்ததால் ஆக்கிரமிப்பு செய்யதவர்களிடம் இருந்து ஏரியை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் நல்லதம்பியின் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக ஆர்வலர் நல்லதம்பி மற்றும் அவரது தந்தை வீரமலை என்பவரும் வயலில் இருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற போலிஸார் இரு உடல்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SOCIAL ACTIVIST, KARUR, MURDERED