RRR Others USA

'எதிர்பாராமல் வெடித்த எலெக்ட்ரிக் பைக்' - உயிரிழந்த தந்தை, மகள்! - வேலூரில் சோகம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூரில் எலெக்ட்ரிக் பைக் வெடித்ததில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

'எதிர்பாராமல் வெடித்த எலெக்ட்ரிக் பைக்' - உயிரிழந்த தந்தை, மகள்! - வேலூரில் சோகம்

எலெக்ட்ரிக் பைக்

வேலூரை அடுத்த சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை வர்மா. இவருடைய வயது 49 ஆகும். இவர் சமீபத்தில் 95,000 மதிப்பு உள்ள எலெக்ட்ரிக் பைக்கை வாங்கியிருக்கிறார். இதன் இடையே ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்கு தனது மகளுடன் சென்றிருக்கிறார் துரை வர்மா. அப்போது, தங்களது எலெக்ட்ரிக் வாகனத்தை சார்ஜில் போட்டுவிட்டு தந்தையும் மகளும் தூக்கியுள்ளனர்.

பற்றிய தீ

சார்ஜ் போடப்பட்ட எலெக்ட்ரிக் வாகனத்தில் இருந்த பேட்டரியில் ஏற்பட்ட தீயின் காரணமாக பைக் எரியத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அருகில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்றிலும் தீப்பிடித்திருக்கிறது. பெட்ரோலில் இயங்கும் அந்த பைக், முழுவதுமாக எரிந்து சாம்பலாகியிருக்கிறது.

Father and Daughter dies in electric bike blast

வாகனங்களில் ஏற்பட்ட தீ மளமளவென்று வீட்டிற்குள் பரவியுள்ளது. இதனால் வீட்டிற்கு உள்ளே உறங்கிக்கொண்டிருந்த துரை வர்மா மற்றும் அவரது மக்கள் அலறவே, அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியோடு ஓடிவந்தனர். தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால், அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் அண்டை மக்கள்.

பரிதாபம்

தீ விபத்தின்போது, வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட துரை வர்மா மற்றும் அவரது மகள் வெளியேற நினைத்திருக்கின்றனர். ஆனால், தீ வாசல் பக்கம் கொழுந்துவிட்டு எரிந்ததால் கழிப்பறைக்குள் சென்று பதுங்கியுள்ளனர். ஆனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது துரை வர்மா மற்றும் அவரது மகள் உள்ளேயே உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

விசாரணை

இதனை அடுத்து, இருவர் உடலும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Father and Daughter dies in electric bike blast

வேலூர் பகுதியில் எலெக்ட்ரிக் வாகனம் தீப்பிடித்ததில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

VELLORE, ELECTRICBIKE, FIREACCIDENT, வேலூர், எலெக்ட்ரிக்பைக், தீவிபத்து

மற்ற செய்திகள்