'டோல் கேட்'ல காத்திருக்க வேண்டாம்'...'டிச.1 முதல் 'ஃபாஸ்ட் டேக் சிஸ்டம்'... கட்டணம், ரீசார்ஜ் செய்யும் முறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுங்கச் சாவடிகளில் வரிசையில் வாகனங்கள் காத்து நிற்பதை தவிர்க்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் தான் 'ஃபாஸ்ட் டேக்'.
வெளியூர் செல்வோர் சுங்க சாவடிகளில் பணம் செலுத்துவதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். இதனால் அதிகமான கால விரையம் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக ஃபாஸ்ட் டேக் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாகன ஓட்டிகள் எளிதாக தங்கள் சுங்க கட்டணத்தை செலுத்த முடியும். தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டம் என்றழைக்கப்படும் ஃபாஸ்ட் டேக் திட்டமானது வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த திட்டத்தில் இணைந்து கொள்வோர் எந்த ஒரு சுங்கச் சாவடியிலும் வரிசையில் காத்து நின்று பணம் கட்ட தேவையில்லை.
ஃபாஸ்ட் டேக் திட்டத்தின் கீழ் வரும் வாகன ஓட்டிகளின் விபரம், வாகனத்தின் விபரம், ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் பதிவேற்றம் செய்யப்படும். வங்கிக் கணக்குடன் ஃபாஸ்ட் டேக் கார்டை இணைத்துக் கொண்டால் பணம் தானாக வசூலிக்கப்படும். இதற்காக 22 வங்கிகளுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
வாகனத்தின் கண்ணாடியில் ஃபாஸ்ட் டேக் கார்டை பொருத்தினால் போதும். வாகனமானது சுங்கச் சாவடியை கடக்கும் போது அடையாளத்தை தானாக கண்டறிந்து பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும். இதற்காக சுங்கச்சாவடியில் பிரத்யேக வழியும் உருவாக்கப்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் விரைவாக செல்ல முடியும்.
இதனிடையே எஸ்பிஐ வங்கியும் ஃபாஸ்ட் டேக் திட்டத்தை வழங்குகிறது. அதனை எப்படி வாங்குவது என்பது குறித்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஃபாஸ்ட் டேக் வழங்கல் கட்டணம் ரூ.100. இது வாகனத்தை பொறுத்து கட்டண விவரங்கள் மாறுபடும். இதனிடையே எஸ்பிஐ-ஃபாஸ்ட் டேக் திட்டத்தை பெறுவதற்கு, அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு சென்று, உங்கள் விண்ணப்ப ஆவணத்தை KYC ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
FASTag SBIன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். (fastag.onlinesbi.com). SBI FASTag வேலிடிட்டி மூன்று ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.