"இந்த மாதிரி Friend இல்லயேன்னு தோணும்".. கேட்டதும் துள்ளி குதிச்ச மைனா, மணிகண்டா.. கடைசில அவங்க ஒரு ட்விஸ்ட் வெச்சாங்க பாக்கணுமே!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்து சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

"இந்த மாதிரி Friend இல்லயேன்னு தோணும்".. கேட்டதும் துள்ளி குதிச்ச மைனா, மணிகண்டா.. கடைசில அவங்க ஒரு ட்விஸ்ட் வெச்சாங்க பாக்கணுமே!!

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது வாரத்திற்கு ஒரு டாஸ்க் அரங்கேறி வருவதால் ஏராளமான பஞ்சாயத்தும் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க், சமீபத்தில் நடந்து முடிந்த நீதிமன்ற டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.

இதில், நீதிமன்ற டாஸ்க் அதிக ஹைலைட்டாக அமைய காரணம், இதில் சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்பது தான். சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை முன் வைத்து அதை வழக்காக பதிவு செய்ய வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை தேர்வு செய்து, அனைத்து போட்டியாளர்களாலும் தேர்வு செய்யப்படும் நீதிபதி முன்பு வைத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்ற டாஸ்க்.

fan question about myna and manikanta friendship cringe

இதில் பல போட்டியாளர்கள் வைத்த வழக்கு தொடர்பாக நடந்த வாதம், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல வழக்குகளில் எதிர்பாராத வகையில் தீர்ப்பு கிடைத்திருந்த நிலையில், சில வழக்குகள் சற்று வேடிக்கையாக சிரிப்பலை மோடிலும் சென்றிருந்தது. அதே போல நீதிமன்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் செயல்பட்டது குறித்து கமல்ஹாசன் தெரிவித்திருந்த கருத்தும் பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்றிருந்ததது.

இதற்கு மத்தியில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் சமீபத்தில் வெளியேறி இருந்தார். சில போட்டியாளர்கள் இதன் காரணமாக மன வேதனை அடையவும் செய்திருந்தனர். அப்படி ஒரு சூழலில், சமீபத்திய எபிசோடில் பிக்பாஸ் அரங்கில் இருக்கும் பார்வையாளர்கள் சிலர், நேரடியாக போட்டியாளர்களிடம் பேசவும் செய்தனர். மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக அவர்கள் போட்டியாளர்களிடம் கேட்கவும் செய்திருந்தனர்.

fan question about myna and manikanta friendship cringe

அப்படி மைனா நந்தினி மற்றும் மணிகண்டா ஆகியோரின் நட்பு குறித்து பேசிய பெண் பார்வையாளர் ஒருவர், "மைனா, மணிகண்டா ஃப்ரண்ட்ஷிப்பை பார்க்கும் போது எனக்கு அப்படி ஒரு ஃப்ரண்ட் இல்லையேன்னு இருக்கு" என கூறியதும், மைனா மற்றும் மணிகண்டா ஆகியோர் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், தொடர்ந்து பேசும் அந்த பெண், "ஆனா, இந்த கேம்க்குள்ள வரும் போது ரொம்ப Cringe ஆ இருக்கு" என சொன்னதும் அனைவரும் சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

மைனா மற்றும் மணிகண்டா ஆகியோரும் சிரித்த நிலையில், இதற்கு விளக்கம் கொடுக்கும் மணிகண்டா, "சத்தியமா கேம்க்குள்ள என்னைக்குமே அப்படி நடந்தது கிடையாது. அப்படி தோணிச்சுன்னா இனிமே எனக்கும் மைனாவுக்கும் கடுமையான போட்டி இருக்கும்ங்குறத சொல்லிக்க விரும்புறேன்" என்கிறார். உடனே கமல்ஹாசனும், "அப்படியா?" என கேட்க, "கண்டிப்பா சார்" என்கிறார் மணிகண்டன்.

fan question about myna and manikanta friendship cringe

தொடர்ந்து பேசும் கமல்ஹாசன், "இல்ல ஒரு மாதிரி பாக்குறாங்க. அடப்பாவிங்க மாதிரி" என மைனாவை குறிப்பிடுகிறார். இதற்கு மைனா விளக்கம் கொடுக்க, Cringe என்பதன் பொருளையும் சைடில் மணிகண்டனிம் கேட்கிறார் மைனா. இதனைக் கவனித்த கமல்ஹாசன், "கலந்து ஆலோசிக்காம எதையுமே செய்ய மாட்டிங்களா நீங்க" என மைனாவை கலாய்க்கவும் செய்கிறார்.

KAMAL HAASAN, BIGG BOSS, MYNA NANDHINI, MANIKANTA RAJESH

மற்ற செய்திகள்