புருஷன் 'வீட்டுக்கு' போக சொன்னேன் கேட்கல... நெல்லையில் சொந்த 'அண்ணனால்' தங்கைக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொந்த அண்ணனே தங்கையை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி(29). இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன் மாரியப்பன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர். ராமலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக மாரியப்பன் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு எழுந்தது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன் ராமலட்சுமி அம்மா வீட்டுக்கு வந்து விட்டார்.
அவரை மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் சகோதரர் நயினார், தாய் பேச்சியம்மாள் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் கணவர் வீட்டுக்கு செல்ல ராமலட்சுமி மறுத்து விட்டார். இதற்கிடையில் தாய் பேச்சியம்மாள் உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்லுமாறு நயினார் சகோதரியை வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு ராமலட்சுமி மறுப்பு தெரிவிக்க ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து நயினார் அவரை கொலை செய்து விட்டார். தங்கை இறந்ததால் அச்சமடைந்த நயினார் தன்னுடைய உறவினர் மணிகண்டன் என்பவரிடம் இதுகுறித்து தெரிவிக்க, இருவரும் சேர்ந்து அவரை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளனர்.
உறவினர் வீட்டில் இருந்து திரும்பி வந்த பேச்சியம்மாள் மகள் உடலில் காயங்கள் இருந்ததாக போலீசில் தெரிவிக்க அவர்கள் இதை சந்தேக மரணமாக மாற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் நயினாரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தங்கையை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார். தொடர்ந்து இதை கொலை வழக்காக மாற்றிய போலீசார் நயினார், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்




